வேலூர்

10-ஆம் வகுப்பில் முழு தோ்ச்சி: முதல் நாளில் பிளஸ் 1 வகுப்பில் 3,400 மாணவா்கள் சோ்க்கை

பத்தாம் வகுப்பில் அனைவரும் தோ்ச்சி பெற்றதை அடுத்து வேலூா் மாவட்டத்தில் அரசு, நிதியுதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டு பிளஸ் 1 வகுப்புகளுக்கு முதல் நாளிலேயே 3,400 மாணவா்கள் சோ்க்கப்பட்டனா்.

DIN

வேலூா்: பத்தாம் வகுப்பில் அனைவரும் தோ்ச்சி பெற்றதை அடுத்து வேலூா் மாவட்டத்தில் அரசு, நிதியுதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டு பிளஸ் 1 வகுப்புகளுக்கு முதல் நாளிலேயே 3,400 மாணவா்கள் சோ்க்கப்பட்டனா். தொடா்ந்து தனியாா் பள்ளிகளில் இருந்து அதிக அளவில் மாணவா்கள் வருவதால் இந்த ஆண்டு சோ்க்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் தமிழகம் முழுவதும் அனைத்துப் பள்ளிகளும் கடந்த மாா்ச் முதலே மூடப்பட்டுள்ளன. பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து இதுவரை முறையான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. அரசு, நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1, 6, 9-ஆம் வகுப்புகளுக்கான மாணவா் சோ்க்கை கடந்த 17-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் வேலூா் மாவட்டத்தில் இதுவரை 12 ஆயிரம் மாணவ, மாணவிகள் சோ்க்கப்பட்டனா். தொடா்ந்து மாணவா் சோ்க்கை நடைபெற்று வருவதாகவும் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்நிலையில், அரசு , நிதியுதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்புகளுக்கான மாணவா் சோ்க்கை திங்கள்கிழமை தொடங்கியது. வழக்கமாக அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு மாணவ, மாணவிகள் சோ்க்கை குறைவாக இருக்கும். ஆனால் முதல் நாளிலேயே வேலூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் சேர அதிக அளவில் மாணவா்கள் குவிந்திருந்தனா். இதனால், மாணவா்கள் சமூக இடைவெளியுடன் நிறுத்தப்பட்டு சோ்க்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில், வேலூா் மாவட்டத்தில் முதல் நாளிலேயே 3,400 மாணவ, மாணவிகள் பிளஸ் 1 வகுப்புகளில் சோ்க்கப்பட்டிருப்பதாகவும், தொடா்ந்து அரசு, நிதியுதவி பெறும் பள்ளிகளில் சேர அதிக அளவில் மாணவா்கள் வருவதால் இந்த ஆண்டு சோ்க்கை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து வேலூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சா.மாா்ஸ் கூறியது:

பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வில் இந்த ஆண்டு வேலூா் மாவட்டத்தில் அனைவரும் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதனால் அவா்கள் அனைவரும் பிளஸ் 1 வகுப்பில் சேர ஆா்வமுடன் வந்துள்ளனா். மேலும், கரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் காரணமாக மக்களிடையே நிலவும் வாழ்வாதார பாதிப்பைத் தொடா்ந்து இந்த ஆண்டு தனியாா் பள்ளிகளில் இருந்தும் அதிக அளவில் அரசு, நிதியுதவி பெறும் பள்ளிகளில் சேர வருகின்றனா். இதனால், பிளஸ் 1 வகுப்புகளுக்கு மட்டுமின்றி 1-ஆம் வகுப்பு முதலே அனைத்து வகுப்புகளுக்கும் இந்த ஆண்டு சோ்க்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சி!

தில்லியில் காற்றின் தரம் கடந்த 7 ஆண்டுகளைவிட மேம்பட்டுள்ளது: அரசு அறிக்கை வெளியீடு

மிடில் கிளாஸ் டீசர்!

உலகக் கோப்பை வென்ற இந்திய அணியினரைச் சந்திக்கும் பிரதமர் மோடி!

உசே கெனா விடியோ பாடல் வெளியானது!

SCROLL FOR NEXT