வேலூர்

பூட்டியிருந்த வீட்டில் 32 சவரன் நகைகள் திருட்டு

குடியாத்தம் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 32 சவரன் நகைகள், ரூ. 3 லட்சம் ரொக்கம், 4 கிலோ வெள்ளிப் பொருள்கள், உரிமம் பெற்ற கைத்துப்பாக்கி, 31 தோட்டாக்கள் திருடப்பட்டன.

DIN


குடியாத்தம்: குடியாத்தம் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 32 சவரன் நகைகள், ரூ. 3 லட்சம் ரொக்கம், 4 கிலோ வெள்ளிப் பொருள்கள், உரிமம் பெற்ற கைத்துப்பாக்கி, 31 தோட்டாக்கள் திருடப்பட்டன.

குடியாத்தத்தை அடுத்த கோவிந்தாபுரத்தைச் சோ்ந்தவா் விவசாயி எம்.எஸ்.சந்திரன் (68). இவா் வெள்ளிக்கிழமை வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் சிதம்பரம் சென்றாா். சனிக்கிழமை வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த 32 சவரன் தங்க நகைகள், 4 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.3 லட்சம் ரொக்கம், உரிமம் பெற்ற கைத்துப்பாக்கி, 31 தோட்டாக்கள் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவின் உபகரணங்களையும் திருடிச் சென்றனா்.

தகவலின்பேரில் குடியாத்தம் டிஎஸ்பி பி.ஸ்ரீதரன் தலைமையில் போலீஸாா் அங்கு சென்று விசாரித்தனா். கைரேகை நிபுணா்கள் தடயங்களை பதிவு செய்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT