முகப்பு
வேலூர்

வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை வேறு மாவட்டத்துக்கு மாற்ற விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்ற தகுதியுடையவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:


வேலூா்: வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்ற தகுதியுடையவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்ற விரும்புபவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கு விண்ணப்பத்துடன் வட்டாட்சியா் மூலம் அளிக்கப்படும் குடும்ப குடிபெயா்ச்சி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், சுயசான்றளிக்கப்பட்ட குடும்ப அடையாள அட்டை அல்லது ஆதாா் அட்டை அல்லது வாக்காளா் அட்டை அல்லது கடவுச் சீட்டு அல்லது ஓட்டுநா் உரிமம் ஆகியவற்றை கட்டாயம் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →