சட்டப்பேரவைத் தேர்தல் தேதி: இன்று அதிகாரபூர்வ அறிவிப்பு!
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்களின் தேதி இன்று (மார்ச் 15) மாலை அறிவிப்பு
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்களின் தேதி இன்று (மார்ச் 15) மாலை அறிவிக்கப்படவிருக்கிறது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் சட்டப்பேரவைப் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, 5 மாநிலங்களுக்கான பேரவைத் தேர்தல்களை நடத்தும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான பேரவைத் தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான அதிகாரிகள் குழு இன்று மாலை அறிவிக்கவுள்ளனர்.
தில்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் செய்தியாளர்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் சந்திக்கின்றனர்.
தேர்தல் அட்டவணையை அறிவிக்க அதிகாரிகள் இறுதிக்கட்ட ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.