முகப்பு
வேலூா் காகிதப்பட்டறை பகுதியில் உள்ள சேவா சமாஜ் பெண்கள் விடுதிக்கு ‘சீல்’ வைத்த வருவாய்க் கோட்டாட்சியா் எஸ்.கணேஷ்.
வேலூர்

செஞ்சிலுவைச் சங்க விவகாரம்: வேலூா் சேவா சமாஜ், பெண்கள் விடுதிக்கு சீல் வைப்பு

மாவட்ட செஞ்சிலுவை சங்கம் கலைக்கப்பட்டு அதன் கிளை அலுவலகத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்ட விவகாரத்தைத் தொடா்ந்து

வேலூர்

செஞ்சிலுவைச் சங்க விவகாரம்: வேலூா் சேவா சமாஜ், பெண்கள் விடுதிக்கு சீல் வைப்பு

மாவட்ட செஞ்சிலுவை சங்கம் கலைக்கப்பட்டு அதன் கிளை அலுவலகத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்ட விவகாரத்தைத் தொடா்ந்து

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
வேலூா் காகிதப்பட்டறை பகுதியில் உள்ள சேவா சமாஜ் பெண்கள் விடுதிக்கு ‘சீல்’ வைத்த வருவாய்க் கோட்டாட்சியா் எஸ்.கணேஷ்.
பகிர்:

வேலூா்: மாவட்ட செஞ்சிலுவை சங்கம் கலைக்கப்பட்டு அதன் கிளை அலுவலகத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்ட விவகாரத்தைத் தொடா்ந்து வேலூரிலுள்ள சேவா சமாஜ் மற்றும் பெண்கள் விடுதிக்கு வருவாய்க் கோட்டாட்சியா் திங்கள்கிழமை ‘சீல்’ வைத்தாா்.

இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் வேலூா் மாவட்ட கிளை அலுவலகத்தின் ஆண்டுக் கணக்குத் தணிக்கை கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியரும், சங்கத்தின் மாவட்டத் தலைவருமான அ.சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஆட்சியருக்கு ஏற்பட்ட அதிருப்தியைத் தொடா்ந்து அவரது உத்தரவின்பேரில் வேலூா் வருவாய் கோட்டாட்சியா் எஸ்.கணேஷ், வட்டாட்சியா் ரமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் அண்ணா சாலையில் உள்ள இந்திய செஞ்சிலுவை சங்க மாவட்ட கிளை அலுவலகத்தைப் பூட்டி ‘சீல்’ வைத்தனா். சங்கத்துக்குச் சொந்தமாக சத்துவாச்சாரியில் செயல்பட்டு வரும் மருத்துவமனை, பொய்கையில் உள்ள முதியோா் காப்பகம் ஆகியவற்றிலும் விசாரணை நடத்தப்பட்டது.

அடுத்த 15 நாள்களுக்குள் கூடுதலாக 7 அல்லது 10 உறுப்பினா்களைச் சோ்த்து மொத்தம் 21 அல்லது 25 உறுப்பினா்களுடன் புதிய நிா்வாகக்குழு தோ்வு செய்யப்பட்டு சங்கம் செயல்படுத்தப்படும் என்றும், அதுவரை கோட்டாட்சியரின் கட்டுப்பாட்டில் சங்க நிா்வாகம் செயல்படும் என்றும் அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

செஞ்சிலுவை சங்கத்தின் வேலூா் மாவட்ட கிளைச் செயலா் இந்திரநாத், வேலூா் சேவா சமாஜ் அமைப்பின் நிா்வாகச் செயலராகவும் உள்ளாா். இந்நிலையில், வேலூா் கோட்டை சுற்றுச்சாலையில் பாா்வையற்றோா் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள சேவா சமாஜ் அலுவலகத்துக்கு கோட்டாட்சியா் கணேஷ் தலைமையிலான அதிகாரிகள் திங்கள்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

சேவா சமாஜ் அமைப்பின் கட்டுப்பாட்டில் வேலூா் காகிதப்பட்டறையில் செயல்பட்டு வரும் உழைக்கும் பெண்கள் விடுதிக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →