முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு!
மேற்கு வங்கத்தில் அதிக முஸ்லிம்கள் கொல்லப்படுவதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது குறித்து...
கடந்த 3 ஆண்டுகளில் மேற்கு வங்கம் மாநிலத்தில்தான் அதிக முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
மேற்கு வங்கத்தில், நிகழாண்டில் (2026) சட்டப் பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளதால், ஆளுங்கட்சியான திரிணமூல் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரங்களை மேற்கொண்டுள்ளன.
இந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளில் நாட்டிலுள்ள பிற மாநிலங்களை விடவும் மேற்கு வங்கத்தில்தான் அதிக முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாக, அம்மாநில பாஜக தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சமிக் பட்டாச்சார்யா குற்றம்சாட்டியுள்ளார்.
Advertisement
Advertisement
இதுபற்றி, புதன்கிழமை (மார்ச் 4) செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:
“முஸ்லிம் சமுதாய மக்களிடம் நான் கோரிக்கை விடுக்கிறேன். மேற்கு வங்கத்தில் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கையை பாஜக ஆளும் குஜராத், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களுடன் ஒப்பிடுங்கள். பாஜக ஆளும் மாநிலங்களை விடவும் மேற்கு வங்கத்தில் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.
இத்துடன், பல்வேறு சமயங்களில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முஸ்லிம் உறுப்பினர்கள் அக்கட்சியின் மற்ற உறுப்பினர்களால் கொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகவும் சமிக் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.
The BJP has alleged that the state of West Bengal has witnessed the highest number of Muslims being killed in the last 3 years.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.