மேற்கு வங்கத்தில் பள்ளி வாகனம் மீது ரயில் மோதியது! 3 குழந்தைகள் பலி!
மேற்கு வங்கத்தில் பள்ளி வாகனம் மீது ரயில் மோதியது பற்றி...
மேற்கு வங்கத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் வெள்ளிக்கிழமை பலியாகினர்.
முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள அசிம்கஞ்ச் - கட்வா ரயில் வழித்தடத்தில், கர்ணசுபர்ணா நிலையத்திற்கும் கோவிந்தபூர் ரயில்வே கேட் பகுதிக்கும் இடையே வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் விபத்து நடந்துள்ளது.
ரயில்வே கேட்டை பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற கார் கடக்க முயன்றபோது, அவ்வழியாக சென்ற பயணிகள் ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த விபத்தில் 3 பள்ளி மாணவர்களும், உள்ளூர் நபர் ஒருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஓட்டுநர் மற்றும் 4 மாணவர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தை நேரில் கண்ட உள்ளூர் மக்கள் கூறுவதாவது:
“ஹவுரா நோக்கிச் சென்ற நவத்வீப் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்து சென்ற பிறகும் ரயில்வே கேட் மூடப்படாமல் திறந்த நிலையிலேயே இருந்தது.
கேட் திறந்திருந்ததால் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற காரும், மிதிவண்டியில் ஒருவரும் தண்டவாளத்தைக் கடக்க முயன்றனர். அப்போது அவ்வழியாக வந்த புறநகர் ரயில் மோதி விபத்து ஏற்பட்டது” என்றனர்.
காயமடைந்தவர்களுக்கு உள்ளூர் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர், முர்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்து தொடர்பாக ரயில்வே காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
Train hits school vehicle in West Bengal! 3 children killed!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.