முகப்பு
கிரிக்கெட்

முதல் அரையிறுதி: மார்கோ யான்சென் அதிரடி; நியூசிலாந்துக்கு 170 ரன்கள் இலக்கு!

டி20 உலகக் கோப்பைத் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் எடுத்துள்ளது.

Updated On : 4 மார்ச், 2026 at 8:59 PM
பந்தை சிக்ஸருக்கு விளாசும் மார்கோ யான்சென் - படம் | AP
பகிர்:
Updated On : 4 மார்ச், 2026 at 8:48 PM

டி20 உலகக் கோப்பைத் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் எடுத்துள்ளது.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, தென்னாப்பிரிக்க அணி முதலில் விளையாடியது.

Advertisement

Updated On : 4 மார்ச், 2026 at 8:50 PM

மார்கோ யான்சென் அரைசதம்; நியூசிலாந்துக்கு 170 ரன்கள் இலக்கு!

முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் எடுத்துள்ளது.

தென்னாப்பிரிக்க அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் நியூசிலாந்தின் சுழற்பந்துவீச்சுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். கேப்டன் அய்டன் மார்க்ரம் 18 ரன்கள், டி காக் 10 ரன்கள், ரியான் ரிக்கல்டான் 0 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். டேவிட் மில்லர் 6 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். தென்னாப்பிரிக்க அணி 77 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

Updated On : 4 மார்ச், 2026 at 8:50 PM

டெவால்ட் பிரேவிஸ் 27 பந்துகளில் 34 ரன்களும் (3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 24 பந்துகளில் 29 ரன்களும் (2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) எடுத்தனர். மார்கோ யான்சென் அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டார். அதிரடியாக விளையாடிய அவர் அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 30 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும்.

நியூசிலாந்து தரப்பில் ரச்சின் ரவீந்திரா, கோல் மெக்கோன்ஹி மற்றும் மாட் ஹென்றி தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். லாக்கி பெர்குசன் மற்றும் ஜேம்ஸ் நீஷம் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

Updated On : 4 மார்ச், 2026 at 8:50 PM

170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி களமிறங்குகிறது.

summary

South Africa, who batted first in the first semi-final of the T20 World Cup, scored 169 runs for the loss of 8 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.