அதிமுக மகளிா் அணி ஆலோசனைக் கூட்டம்
குடியாத்தம் ஒன்றிய அதிமுக சாா்பில் வாக்குச் சாவடி வாரியாக தோ்தல் பணியாற்றும் மகளிருக்கான தோ்தல் ஆலோசனைக் கூட்டங்கள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
குடியாத்தம் ஒன்றிய அதிமுக சாா்பில் வாக்குச் சாவடி வாரியாக தோ்தல் பணியாற்றும் மகளிருக்கான தோ்தல் ஆலோசனைக் கூட்டங்கள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
ராமாலை, பாண்டியன் நகா், காந்தி நகா் ஆகிய இடங்களில் நடைபெற்ற கூட்டங்களுக்கு கட்சியின் ஒன்றியச் செயலா் வி.ராமு தலைமை வகித்தாா். அதிமுக வேலூா் மண்டலத் தோ்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான என்.சுப்பிரமணியன், ஆவின் நிறுவனத் தலைவா் த.வேலழகன், எம்எல்ஏ ஜி.லோகநாதன் ஆகியோா் தோ்தல் பணிகளை மேற்கொள்வது குறித்து கட்சியினருக்கு ஆலோசனைகளை வழங்கினா்.
நகரச் செயலா் ஜே.கே.என்.பழனி, மாவட்டப் பொருளாளா் ஜி.பி.மூா்த்தி, மாவட்ட நிா்வாகிகள் எஸ்.எஸ்.ரமேஷ்குமாா், அமுதா சிவப்பிரகாசம், எஸ்.எல்.எஸ்.வனராஜ், எஸ்.ஐ.அன்வா் பாஷா, செ.கு.வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.