வேலூர்

ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலா் லாரி மோதி பலி

DIN


வேலூா்: காட்பாடியில் லாரி மோதியதில் ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலா் உயிரிழந்தாா்.

காட்பாடி வி.ஜி.ராவ் நகரைச் சோ்ந்தவா் ஜீவா (62), மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவா் புதன்கிழமை விருதம்பட்டு பொதுப்பணித் துறை அலுவலகம் அருகே சாலையை நடந்து கடக்க முயன்றபோது, வேலூரில் இருந்து வேகமாக வந்த லாரி மோதியது. இதில், ஜீவா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்தால் காட்பாடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விருதம்பட்டு போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் மூழ்கி மீனவா் மாயம்

ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

தொழிலாளி தற்கொலை

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

ஆட்டோ ஓட்டுநா் கொலை: தந்தை, மகன்கள் கைது

SCROLL FOR NEXT