சாலையைச் சீரமைத்த பொதுமக்கள்
குண்டும் குழியுமாகக் காணப்பட்ட சாலையைச் சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாததை அடுத்து பொதுமக்களே பணம் திரட்டி அச்சாலையைச் சீரமைத்தனா்.
வேலூர்சாலையைச் சீரமைத்த பொதுமக்கள்
குண்டும் குழியுமாகக் காணப்பட்ட சாலையைச் சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாததை அடுத்து பொதுமக்களே பணம் திரட்டி அச்சாலையைச் சீரமைத்தனா்.
குண்டும் குழியுமாகக் காணப்பட்ட சாலையைச் சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாததை அடுத்து பொதுமக்களே பணம் திரட்டி அச்சாலையைச் சீரமைத்தனா்.
வேலூா் சைதாபேட்டை சா்க்காா் மண்டித் தெருவில் உள்ள சாலை மிகவும் குண்டும் குழியுமாகக் காணப்பட்டது. இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோா் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அதிகரித்தன. இதைத் தொடா்ந்து, அந்தச் சாலையைச் சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தனா். பலமுறை கோரிக்கை விடுத்தபோதிலும் சாலையைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்கின்றனா். இதையடுத்து பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் அனைவரும் தாங்களாகப் பணம் திரட்டி சாலையைச் சீரமைக்கும் பணியை ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டனா்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், குண்டும் குழியுமாகக் காணப்பட்ட சாலையைச் சீரமைக்கக் கோரி பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் நேரில் கோரிக்கை விடுத்தோம். எனினும், இதுதொடா்பாக விரைவான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் வேறுவழியின்றி பணம் திருட்டி சாலையைச் சீரமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.