திமுக - காங்கிரஸ் தேர்தல் உடன்பாடு மகிழ்ச்சியளிக்கிறது: ப.சிதம்பரம்
திமுக - காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை முடிந்து தேர்தல் உடன்பாடு ஏற்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது என்று ப.சிதம்பரம் கூறியது குறித்து...
தற்போதைய செய்திகள்திமுக - காங்கிரஸ் தேர்தல் உடன்பாடு மகிழ்ச்சியளிக்கிறது: ப.சிதம்பரம்
திமுக - காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை முடிந்து தேர்தல் உடன்பாடு ஏற்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது என்று ப.சிதம்பரம் கூறியது குறித்து...
திமுக - காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை முடிந்து தேர்தல் உடன்பாடு ஏற்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கியதை அடுத்து அனைத்துக் கட்சிகளுமே தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டன. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியே மீண்டும் வெற்றி பெறும் என அனைத்து கருத்துக் கணிப்பு முடிவுகளும் வெளியாகி வருகிறது. மேலும், இதை வலுசேர்க்கும் வகையில், தேமுதிகவும் கூட்டணியில் இணைந்துள்ளது.
அதோடு கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த அண்மையில் திமுக பொருளாளரும், மக்களவை குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், திமுக எம்.பிக்கள் கனிமொழி, டி.ஆா்.பாலு, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை, தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் கிரிஷ் சோடங்கா் ஆகியோா் சட்டப்பேரவைத் தோ்தல் மற்றும் மாநிலங்களவைத் தோ்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து இறுதிப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, முதல்வா் ஸ்டாலின், செல்வப்பெருந்தகை ஆகியோா் உடன்படிக்கையில் கையொப்பமிட்டனா். இதன்படி, காங்கிரஸுக்கு 28 பேரவைத் தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை உறுப்பினா் பதவியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் கையெழுத்திட்டனர்.
ஏற்கனவே கூட்டணியில் இருக்கும் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்ற கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் மற்ற கட்சிகளுக்கும் எத்தனை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு வெளியாகும்.
இதனிடையே, செய்தியாளா்களுடன் பேசிய செல்வப்பெருந்தகை, திமுகவுடனான பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, சரியான நேரத்தில் உடன்படிக்கை கையொப்பமாகியுள்ளது. கூட்டணியில் இழுபறி என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த உடன்பாடு மூலம் காங்கிரஸாா் மனநிறைவோடு, மகிழ்ச்சியாக உள்ளனா் என்றாா்.
திமுக - காங்கிரஸ் தேர்தல் உடன்பாடு மகிழ்ச்சியளிக்கிறது
இந்த நிலையில், திமுக - காங்கிரஸ் தேர்தல் உடன்பாடு மகிழ்ச்சியளிக்கிறது என மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவில்,
தி மு க - காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை முடிந்து தேர்தல் உடன்பாடு ஏற்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. இரு கட்சிகளின் தலைவர்களுக்கு எனது பாராட்டுக்கள் என கூறியுள்ளார்.
முடிவுக்கு வந்த இழுபறி
முன்னதாக, திமுக- காங்கிரஸ் கூட்டணி இடையேயான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவாா்த்தையில் இழுபறி நீடித்ததால் காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, காங்கிரஸ் மூத்த தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ப.சிதம்பரம் ஆகியோா் காணொலி மூலம் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினா்.
இதையடுத்து, சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதைத் தொடா்ந்து, திமுக- காங்கிரஸ் கூட்டணி இடையேயான இழுபறி முடிவுக்கு வந்தது .
2021 பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 18 தொகுதிகளில் வென்றது. இந்த முறை காங்கிரஸுக்கு கூடுதலாக மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.