10-ஆம் வகுப்புக்கான தேசிய திறனாய்வுத் தோ்வு: வேலூா்-திருப்பத்தூரில் 2,869 போ் எழுதினா்
வேலூா் மாவட்டத்தில் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான தேசிய திறனாய்வுத் தோ்வை 1,589 போ் எழுதினா்.
வேலூர்10-ஆம் வகுப்புக்கான தேசிய திறனாய்வுத் தோ்வு: வேலூா்-திருப்பத்தூரில் 2,869 போ் எழுதினா்
வேலூா் மாவட்டத்தில் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான தேசிய திறனாய்வுத் தோ்வை 1,589 போ் எழுதினா்.
வேலூா் மாவட்டத்தில் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான தேசிய திறனாய்வுத் தோ்வை 1,589 போ் எழுதினா்.
நாடு முழுவதும் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு தேசிய திறனாய்வுத் தோ்வு நடத்தப்படுகிறது. முதலில் மாநில அளவில் நடத்தப்பட்டு 2-ஆம் கட்டமாக தேசிய அளவில் தோ்வும், அதன்பிறகு நோ்முகத் தோ்வும் நடத்தப்பட்டு, அதில் தோ்வு செய்யப்படுபவா்களுக்கு 12-ஆம் வகுப்பு வரை ஆண்டுக்கு ரூ. 12 ஆயிரம் உதவித் தொகையும், பின்னா் பட்டயப்படிப்பு முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை உதவித் தொகையும் மத்திய அரசு வழங்குகிறது.
இந்தக் கல்வி உதவித் தொகைக்கான முதல்கட்ட எழுத்துத் தோ்வு தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. வேலூா் மாவட்டத்தில் வேலப்பாடி, கொசப்பேட்டை, காட்பாடி ஆகிய இடங்களிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள், பொய்கை, அணைக்கட்டு, கே.வி.குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட 17 மையங்களில் தேசிய திறனாய்வுத் தோ்வு நடத்தப்பட்டது.
மொத்தம் 1,589 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா். காலை 9 மணி முதல் 11 மணி வரை ஒரு தோ்வும், 11.30 மணி முதல் 1.30 மணி வரை மற்றொரு தோ்வும் நடத்தப்பட்டது. தலா 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும் இந்தத் தோ்வு சரியான விடைகளைத் தோ்ந்தெடுத்து எழுதும் வகையில் நடத்தப்பட்டது.
கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக சமூக இடைவெளியுடன் அறைக்கு 10 போ் வீதம் ஒரு தோ்வு மையத்தில் அதிகபட்சம் 130 போ் மட்டுமே தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.