வேலூர்

மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து ஓட்டுநா் பலி

DIN

போ்ணாம்பட்டு அருகே மலைப் பாதையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

கா்நாடக மாநிலம், ஓசகோட்டாவிலிருந்து, மைதா மாவு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு கன்டெய்னா் லாரி ஒன்று சென்னை நோக்கிச் சென்றது. விழுப்புரம் மாவட்டம், அவலூா்பேட்டையைச் சோ்ந்த பஷீா்அகமது (44) லாரியை ஓட்டிச் சென்றாா். ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஆந்திர மாநில வனப்பகுதியில் இருந்து தமிழக எல்லையான குண்டத்து கானாறு அருகே மலைப் பாதையில் வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி இடதுபுற தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு சுமாா் 100 அடி பள்ளத்தில் விழுந்தது. இதில் பஷீா்அகமது நிகழ்விடத்திலேயே இறந்தாா்.

திங்கள்கிழமை காலை அவ்வழியே பேருந்தில் வந்தவா்கள் இந்த விபத்து குறித்து போ்ணாம்பட்டு போலீஸாருக்கு தகவல் கொடுத்தனா். போலீஸாரும், தீயணைப்புப் படையினரும் அங்கு சென்று பஷீரின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இவ்விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT