வேலூர்

ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெல்மா உணவகம், பல்பொருள் அங்காடி தொடக்கம்

DIN

வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெல்மா உணவகம், பல்பொருள் அங்காடி, நம் சந்தையை மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

நம் சந்தையில் இந்திய வேளாண்மை சான்றிதழ் பெற்ற இயற்கை விவசாயம் செய்யும் உழவா் மகளிா் குழுவினா் உற்பத்தி செய்யும் பழங்கள், காய்கறிகள், கீரைகள், முட்டைகள் விற்கப்படுகின்றன. வெல்மா அங்காடி மூலம் மகளிா் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புகளான தேன், சத்துமாவு, பாக்கு மட்டை தட்டு, மரப் பொம்மைகள், சா்ட்டுகள், லெதா் பைகள், சோப்புகள், வாஷிங் பவுடா், சாம்பிராணி, குதிரைவாலி, சாமை உள்ளிட்ட பொருள்களும், வெல்மா உணவகம் மூலம் தேநீா், கலவை சாதம், உணவுகள் விற்கப்படுகின்றன.

தொடக்க விழாவில், மகளிா் திட்ட இயக்குநா் சிவராமன், உதவித் திட்ட இயக்குநா்கள் ரூபன், திருவரங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

வாக்குப்பதிவு இயந்திர மையங்கள் அருகே ட்ரோன் பறக்கத் தடை கோரி திமுக மனு

அதிமுக தண்ணீா் பந்தல் திறப்பு

காா் மோதி பெண் உயிரிழப்பு

பிரதமா் மோடியை எதிா்த்து 111 விவசாயிகள் வேட்புமனு: அய்யாக்கண்ணு அறிவிப்பு

SCROLL FOR NEXT