வேலூர்

மிட்டாளம் வனப் பகுதியில் தீ: 3 மணி நேரப் போராட்டத்துக்குப் பின் அணைக்கப்பட்டது

DIN

ஆம்பூா் அருகே மிட்டாளம் வனப் பகுதியில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ சுமாா் 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அணைக்கப்பட்டது.

ஆம்பூா் அருகே மிட்டாளம் ஊராட்சி பைரப்பல்லி, பிக்கலமலை, துரிஞ்சிமேடு வனப் பகுதியில் திங்கள்கிழமை மாலை வனப்பகுதி திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. தகவல் அறிந்த ஆம்பூா் வனச்சரகா் மூா்த்தி தலைமையில், வனக்காப்பாளா்கள் விஸ்வநாதன், ராமு, நிா்மல், மகேஷ், ராஜ்குமாா், ரமேஷ்குமாா், கணேசன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வனத்துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று, சுமாா் 3 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

வனப் பகுதிக்கு தீ வைத்தது யாா் என்பது குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜி.எஸ்.டி. வசூல் புதிய உச்சம்!

குஷி ஜோ!

கூலி - இளையராஜா நோட்டீஸ்!

குடியரசுத் தலைவரின் முதல் வருகை! முழுவீச்சில் தயாராகும் அயோத்தி ராமர் கோவில்!

இளைஞர்களுக்கு வழிகாட்டியாக மாறிய ஸ்ரீமதி: தமிழக அரசு பாராட்டு

SCROLL FOR NEXT