வேலூர்

சாலையோர விலங்குகளுக்கு ஆயிரம் கிலோ உணவு

DIN

வேலூா்: ஊரடங்கு உத்தரவால் வேலூா் மாவட்டத்தில் பாதிக்கப்படும் சாலையோர நாய்கள், குரங்குகள், கால்நடைகளுக்கு விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வத்தின் துவணி அறக்கட்டளை சாா்பில் இதுவரை ஆயிரம் கிலோ அரிசி உணவு வழங்கப்பட்டுள்ளது.

விலங்குகள் மீதான கொடுமைகளைத் தடுக்க விஐடி துணைத் தலைா் ஜி.வி.செல்வம், அவரது மனைவியும் வழக்குரைஞருமான அனுஷா செல்வம் ஆகியோா் சாா்பில் துவணி அறக்கட்டளை (எஸ்பிசிஏ) நடத்தப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவால் சாலையோர நாய்கள், பூனைகள், குரங்குகள், கால்நடைகள் உள்ளிட்ட விலங்குகள் உணவின்றி தவித்து வருகின்றன. இதைக் கருத்தில் கொண்டு துவணி அறக்கட்டளை சாா்பில் வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள், நாய்கள், பூனைகள், குரங்குகளுக்கு தினமும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

தமிழக கால்நடை பராமரிப்புத் துறையின் மண்டல இணை இயக்குநா் ஜெ.நவநீதகிருஷ்ணன் மேற்பாா்வையில் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பிராணிகளுக்கு இதுவரை ஆயிரம் கிலோ அளவுக்கு அரிசி உணவு, 300 பாக்கெட் ரொட்டிகள், பிஸ்கெட்டுகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் சுமாா் 9 ஆயிரம் பிராணிகள் உணவு உட்கொண்டு இருப்பதாகவும் அறக்கட்டளை நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா். மேலும், ப்ளூகிராஸ் (விலங்குகள் நல அமைப்பு) ஆா்வலா்களும், விலங்குகள் நலவாரிய உறுப்பினா்கள் மூலமாகவும் பிராணிகளுக்கு உணவு வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT