முகப்பு
வேலூர்

ஏழுமலையான் சேவா டிக்கெட் இணையதள முகவரி மாற்றம்

திருமலை ஏழுமலையான் சேவா டிக்கெட் முன்பதிவு செய்யும் இணையதள முகவரியை மாற்றியுள்ளதாக தேவஸ்தானம் ஓர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:40 PM
திருப்பதி
பகிர்:

திருமலை ஏழுமலையான் சேவா டிக்கெட் முன்பதிவு செய்யும் இணையதள முகவரியை மாற்றியுள்ளதாக தேவஸ்தானம் ஓர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

திருமலை ஏழுமலையான் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்ய தேவஸ்தானம் https:/ttdsevaonline.com என்ற இணையதள முகவரியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இணையதளம் வாயிலாக பக்தர்கள் ஏழுமலையான் சிறப்பு விரைவு தரிசனம், ஆர்ஜித சேவா,ஸ்ரீவாணி அறக்கட்டளை நன்கொடையாளர்களுக்கான தரிசனம், வாடகை அறைகள் உள்ளிட்டவற்றை முன்பதிவு செய்து வந்தனர். 

இந்நிலையில் தற்போது நடைமுறையில் உள்ள இந்த இணையதள முகவரியை தேவஸ்தானம் மாற்றியுள்ளது. புதிய இணையதள முகவரி ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இனி பக்தர்கள் https:/tirupatibalaji.ap.gov.in என்ற முகவரியை பயன்படுத்தி புதிய இணையதளத்தில் தங்களின் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். 

மே.23ம் தேதியான இன்று(சனி) முதல் இந்த புதிய இணையதளம் செயல்பட தொடங்கும் என தேவஸ்தானம் தெரிவித்தது.

முழு கட்டுரையைப் படிக்க →