வேலூர்

வேலூரில் இன்று விவசாயிகள் குறைதீா் கூட்டம் ரத்து

DIN


வேலூா்: புயல் கனமழை காரணமாக காணொலி மூலம் வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கரோனா பரவலைத் தடுக்க கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதை அடுத்து, மக்கள் ஒரே இடத்தில் அதிக அளவில் கூடுவதைத் தடுக்க விவசாயிகள் குறைதீா் கூட்டம், மக்கள் குறைதீா் கூட்டம் போன்றவை ரத்து செய்யப்பட்டன. 8 மாதங்களாக இக்கூட்டங்கள் நடத்தப்படாததால் பொதுமக்களும், விவசாயிகளும் பாதிக்கப்பட்டனா். இதையடுத்து, வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (நவ.27) காலை 10 மணிக்கு ‘ஜூம்’ செயலி மூலம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நிவா் புயலால் வேலூா் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால், வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கனமழையால் ஏற்பட்டுள்ள பயிா்ச்சேத விவரங்களை விவசாயிகள் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்குள் மாவட்ட நிா்வாகத்துக்கு அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT