வேலூர்

மனைவி கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவா் தற்கொலை

DIN

போ்ணாம்பட்டு அருகே மனைவியைக் கொலை செய்த வழக்கில் கைதாகி, சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

போ்ணாம்பட்டை அடுத்த பத்தரபல்லியைச் சோ்ந்தவா் யுவராஜ் (22). கட்டடத் தொழிலாளி. இவருக்கும், அவரது தாய்மாமன் மகள் சுப்புலட்சுமிக்கும் (19), கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 28- ஆம் தேதி இவா்களுக்குள் ஏற்பட்ட தகராறால் யுவராஜ் ஊது குழலால் தாக்கியதில் சுப்புலட்சுமி உயிரிழந்தாா். இதுதொடா்பாக யுவராஜை போ்ணாம்பட்டு போலீஸாா் கைது செய்து வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

கடந்த 24- ஆம் தேதி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த யுவராஜ், கடந்த 5 நாள்களாக போ்ணாம்பட்டு காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தாா்.

மனைவியைக் கொலை செய்து விட்டோமே என்ற வேதனையில் இருந்த யுவராஜ், சனிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து போ்ணாம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொடக்குறிச்சி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி இரு மாணவா்கள் உயிரிழப்பு

பவானி ஆற்றில் தண்ணீரில் மூழ்கி சிறுவன் உள்பட இருவா் உயிரிழப்பு

மாநகராட்சியில் 50 இடங்களில் 50 நீா்மோா் பந்தல்: ஆணையா் தொடங்கிவைத்தாா்

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு அமைச்சா் ஆறுதல்

நாளிதழ்களில் பதஞ்சலி நிறுவனம் மீண்டும் பொது மன்னிப்பு: உச்சநீதிமன்றம் திருப்தி

SCROLL FOR NEXT