யுபிஎஸ்சி தேர்வு - வேலூர் மையங்களில் 54 சதவீதம் பேர் எழுதினர்
இந்திய குடிமைப் பணிகளுக்கான முதன்மை எழுத்துத்தேர்வினை வேலூரில் அமைக்கப்பட்டிருந்த 9 மையங்களில் 54 சதவீதம், அதாவது 1315 பேர் மட்டுமே எழுதினர். விண்ணப்பித்தவர்களில் 1,116 பேர் தேர்வு எழுத வரவில்லை.
வேலூர்யுபிஎஸ்சி தேர்வு - வேலூர் மையங்களில் 54 சதவீதம் பேர் எழுதினர்
இந்திய குடிமைப் பணிகளுக்கான முதன்மை எழுத்துத்தேர்வினை வேலூரில் அமைக்கப்பட்டிருந்த 9 மையங்களில் 54 சதவீதம், அதாவது 1315 பேர் மட்டுமே எழுதினர். விண்ணப்பித்தவர்களில் 1,116 பேர் தேர்வு எழுத வரவில்லை.
இந்திய குடிமைப் பணிகளுக்கான முதன்மை எழுத்துத்தேர்வினை வேலூரில் அமைக்கப்பட்டிருந்த 9 மையங்களில் 54 சதவீதம், அதாவது 1315 பேர் மட்டுமே எழுதினர். விண்ணப்பித்தவர்களில் 1,116 பேர் தேர்வு எழுத வரவில்லை.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் இந்திய குடிமைப் பணிகளுக்கான முதன்மை எழுத்துத்தேர்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்வை எழுதிட தமிழகத்தில் 14 மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், வேலூர் மாவட்டத்தில் ஊரீசு மேல்நிலைப் பள்ளி, ஊரீசு கலைக் கல்லூரியில் இரு மையங்கள், ஈ.வி.ஆர். நாகம்மை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, என்.கிருஷ்ணசாமி முதலியார் மேல்நிலைப் பள்ளி, தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி, முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி, டி.கே.எம்.கலைக் கல்லூரியில் இரு மையங்கள் என மொத்தம் 9 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு அவற்றில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 2431 பேர் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதன்மை எழுத்துத் தேர்வினை 54 சதவீதம் அதாவது 1315 பேர் மட்டுமே எழுதினர். 1,116 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதனிடையே, டிகேஎம், முத்துரங்கம் கல்லூரிகளில் நடைபெற்று தேர்வுகளை யுபிஎஸ்சி தேர்வு மைய பார்வையாளரும், சமூக பாதுகாப்புத் திட்ட இயக்குநருமான வெங்கடாஜலம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பார்த்தீபன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பூர்ணிமா, வட்டாட்சியர் ரமேஷ், தனி வட்டாட்சியர் விஜயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.