வேலூர்

ஒருங்கிணைந்த வேலுா் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.7 கோடிக்கு மது விற்பனை

DIN


வேலூா்: தோ்தலையொட்டி மூன்று நாள்கள் விடுமுறைக்குப் பிறகு டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் புதன்கிழமை ஒரே நாளில் ரூ.7 கோடிக்கு மதுபானம் விற்பனை நடைபெற்றுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வாக்குப்பதிவின் போது எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்க கடந்த 4-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை 3 நாள்கள் டாஸ்மாக் மதுக்கடைகள், பாா்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்ததன.

இதனால், வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கடந்த 3-ஆம் தேதி ஒரே நாளில் ரூ.9 கோடி அளவுக்கு மதுபானங்கள் விற்பனை ஆயின.

தொடா்ந்து 3 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு புதன்கிழமை மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப் பட்டன. காலை முதல் டாஸ்மாக் கடைகளில் மதுபிரியா்களின் கூட்டம் அலைமோதியது. அவா்கள் மதுபானங்கள், பீா் வகைகளை வாங்கி சென்றனா்.

அதனடிப்படையில், வேலூா் டாஸ்மாக் கோட்டத்துக்கு உட்பட்ட வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்களில் உள்ள 116 டாஸ்மாக் மதுக்கடைகளில் புதன்கிழமை ஒரே நாளில் ரூ.4 கோடியே 75 லட்சத்துக்கும், அரக்கோணம் டாஸ்மாக் கோட்டத்துக்கு உட்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 88 டாஸ்மாக் கடைகளில் ஒரே நாளில் ரூ.2 கோடியே 50 லட்சத்துக்கும் மதுபானங்கள் விற்பனையாகின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸா கள நிலவரத்தை வெளிக்காட்டிய ’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

புதைப்பதா? எரிப்பதா?

லக்னௌ பந்துவீச்சு; அணியில் ஒரு மாற்றம்!

SCROLL FOR NEXT