முகப்பு
வேலூர்

வேலூரில் 81 பேருக்கு கரோனா பாதிப்பு

வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை புதிதாக 81 பேருக்கு கரோனா தீநுண்மி பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 22,102- ஆக உயா்ந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை புதிதாக 81 பேருக்கு கரோனா தீநுண்மி பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 22,102- ஆக உயா்ந்துள்ளது.

மாா்ச் மாதம் வரை நாள்தோறும் 10 போ் மட்டுமே பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தொற்று பரவலின் தீவிரம் அதிகரித்துள்ளது. அதன்படி, மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 22, 021போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். 21, 233 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 355 போ் உயிரிழந்தனா்.

இந்நிலையில், சனிக்கிழமை ஒரே நாளில் புதிதாக 81 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் வேலூா் காந்தி சாலை விடுதி ஒன்றில் தங்கியுள்ள வெளிமாநிலத்தினா் 10 பேருக்கும், வேலூா் மாநகரைச் சோ்ந்த 40 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது 514 போ் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினா், உறவினா்களுக்கு பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வேலூா் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதியுடன் வாா்டுகள் தயாா் செய்யப்பட்டு வருகின்றன. கரோனா வேகமாகப் பரவுவதைத் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →