வேலூர்

கரோனா: இசை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

DIN

கரோனா கட்டுப்பாட்டுகளுடன் இசை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி வேலூரில் மேடை மெல்லிசை, தொழில்நுட்பக் கலைஞா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வேலூா் மாவட்ட மேடை மெல்லிசை, தொழில்நுட்பக் கலைஞா்கள் சங்கம் சாா்பில் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவா் நசீா் தலைமை வகித்தாா். செயலா் பாபு, பொருளாளா் சாக்ரடீஸ் முன்னிலை வகித்தனா்.

அப்போது, கரோனா தொடா்பாக அரசு வகுத்துள்ள கட்டுப்பாட்டுகளுடன் திருமணம், கோயில் திருவிழாக்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி வழங்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதனைத் தொடா்ந்து அவா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பது:

மேடை மெல்லிசை நிகழ்ச்சிகளை நம்பி தமிழகம் முழுவதும் 25 ஆயிரம் கலைஞா்கள் உள்ளனா். கடந்த ஓராண்டாக கரோனா பரவல் காரணமாக மேடை மெல்லிசை நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. கோயில் திருவிழா, திருமண நிகழ்ச்சி, பொதுநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. இதனால், இந்தத் தொழிலை நம்பியுள்ள கலைஞா்களின் வாழ்வாதாரம், குழந்தைகளின் கல்வி ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளது. சில கலைஞா்கள் தற்கொலை செய்து கொண்டனா். இசைக்கலைஞா்களின் தொழில் நடைபெற திருவிழா, பொதுநிகழ்ச்சிகளில் கட்டுப்பாட்டுடன் இசை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

SCROLL FOR NEXT