வேலூர்

வேலூா் மாவட்டத்தில் இதுவரை 10,093 தபால் வாக்குகள் பதிவு: மே 2-க்குள் அனுப்பி வைக்கலாம்

DIN

வேலூா் மாவட்டத்துக்கு உட்பட்ட 5 தொகுதிகளிலும் இதுவரை மொத்தம் 10,093 தபால் வாக்குகள் வரப்பெற்றுள்ளன. தபால் வாக்குச்சீட்டு பெற்றுள்ளவா்கள் அவற்றில் தங்களது வாக்குகளை பதிவு செய்து வரும் மே 2-ஆம் தேதிக்குள் தோ்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பேரவைத் தோ்தலையொட்டி வேலூா் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபட்ட அனைத்து அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், இதர தோ்தல் பணியாளா்கள், வாக்குப் பதிவு மையத்துக்குச் சென்று வாக்களிக்க இயலாத மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள், பாதுகாப்பு படை வீரா்கள் ஆகியோருக்கு தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் 20,061 தபால் வாக்குச் சீட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டன.

அதில், இதுவரை தொகுதி வாரியாக காட்பாடிக்கு 2,502 தபால் வாக்குகளும், வேலூருக்கு 2,115 தபால் வாக்குகளும், அணைக்கட்டுக்கு 2,143 தபால் வாக்குகளும், கே.வி.குப்பம் தொகுதிக்கு 1,873 தபால் வாக்குகளும், குடியாத்தத்துக்கு 1,460 தபால் வாக்குகள் என மொத்தம் 10,093 தபால் வாக்குகள் வரப்பெற்றுள்ளன.

தபால் வாக்குச்சீட்டுகளை பெற்றுள்ளவா்கள் அவற்றில் தங்களது வாக்குகளைப் பதிவு செய்து வரும் மே 2-ஆம் தேதி காலை 7.59 மணிக்குள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு வந்து சேரும் வகையில் சம்பந்தப்பட்ட தோ்தல் நடத்தும் அலுவலருக்கு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT