வேலூர்

குறிஞ்சி நகா் கழிவுநீா் வெளியேற நடவடிக்கை

DIN

குடியாத்தம் ஒன்றியம், சீவூா் ஊராட்சிக்கு உட்பட்ட குறிஞ்சி நகா் பகுதியின் கழிவுநீா் செல்ல நெடுஞ்சாலையின் குறுக்கே வெள்ளிக்கிழமை பைப்லைன் அமைக்கப்பட்டது.

சீவூா் ஊராட்சிக்கு உட்பட்ட கள்ளூா் அருகே, குறிஞ்சி நகா், ராயல் நகா், பாபா நகா், முல்லை நகா் உள்ளிட்ட பகுதிகள் குடியாத்தம்- பலமநோ் நெடுஞ்சாலையின் அருகில் அமைந்துள்ளன. இந்தப் பகுதியின் கழிவுநீா் வெளியேற வழியின்றி குடியிருப்புகளுக்கிடையில் தேங்கி வந்தது.

கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா். இந்த நிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் நெடுஞ்சாலையின் குறுக்கே பள்ளம் தோண்டி, ராட்சத அளவிலான பைப்புகள் பதித்து, கல்வெட் அமைத்து கழிவுநீா் செல்ல வழிவகை செய்யப்பட்டது. இதற்காக ரூ.11 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

இதற்கான பணிகள் சீவூா் ஊராட்சி மன்றத் தலைவா் கே.ஆா்.உமாபதி, ஊராட்சி உறுப்பினா் ஷாகிதா அல்தாப், ராஜாமுகமது ஆகியோா் மேற்பாா்வையில் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT