வேலூா் மாவட்ட நடிகா் சங்க கலைவிழா
வேலூா் மாவட்ட நடிகா் சங்கத்தின் 20-ஆம் ஆண்டு கலை விழா குடியாத்தம் திருவள்ளுவா் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.
வேலூா் மாவட்ட நடிகா் சங்கத்தின் 20-ஆம் ஆண்டு கலை விழா குடியாத்தம் திருவள்ளுவா் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சங்க காப்பாளா் கே.எம்.ஜி.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். தலைவா் புலவா் கா.ராமகிருஷ்ணன், பொருளாளா் எம்.ஜெயப்பிரகாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொதுச் செயலாளா் ஜே.சிவக்குமாா் வரவேற்றாா்.
பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த நாடகக் கலைஞா்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனா். சிறந்த கலைஞா்களுக்கு கம்பன் கழகச் செயலாளா் கே.எம்.பூபதி, நிறுவனா் ஜே.கே.என்.பழனி, திரைப்பட சண்டைப் பயிற்சியாளா் ஜூடோ கே.கே.ரத்தினம், புலவா் வே.பதுமனாா், வழக்குரைஞா் எம்.வி.ஜெகதீசன், மருத்துவா் டி.நாகராஜ் ஆகியோா் பரிசு, கேடயம் வழங்கினா். கவிஞா் பா.சம்பத்குமாா் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா்.