முகப்பு
இந்தியா

மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!

மேற்காசியாவில் தாக்குதல்கள்: இந்தியர்கள் உயிரிழப்பு விவரம் வெளியீடு!

Updated On : 23 மார்ச், 2026 at 1:35 PM
ஈரானில் தாக்குதல்களுக்குப்பின் மீட்புப்பணி... - AP/PTI
பகிர்:

புது தில்லி : மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் எத்தனை பேர்? மற்றும் அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பு பற்றிய விவரம் வெளியுறவு அமைச்சகம் தரப்பிலிருந்து இன்று(மார்ச் 23) வெளியிடப்பட்டது.

இது குறித்து, புது தில்லியில் இன்று செய்தியாளர்களுடனான சந்திப்பில் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்திருப்பதாவது :

“இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் அனைவரும் பதுகாப்பாக உள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் தாக்குதல்களில் அங்கு காயமடைந்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அங்குள்ள இந்திய தூதரகம் இவ்விவகாரத்தை கண்காணித்து வருகிறது. அந்த நபரும் பாதுகாப்பாக இருக்கிறார்.

இந்தத் தாக்குதல்களில் இந்தியர்கள் 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் காயமடைந்திருக்கிறார், ஒரு இந்தியரைக் காணவில்லை.

மேற்காசியாவில் நீடிக்கும் சண்டை குறித்து உலகத் தலைவர்கள் பலருடன் பிரதமர் மோடி தொடர்ந்து பேசி வருகிறார். அவர் ஈரான் அதிபருடன் பேசினார். அப்போது, அப்பிராந்தியத்தின் முக்கிய உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களுக்கு அவர் கண்டனம் தெரிவித்தார். அவை உலக விநியோகச் சங்கிலியை சீர்குலைப்பதாகவும் குறிப்பிட்டார். பாதுகாப்பான கப்பல் வழித்தடத்தின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். இந்தியர்களின் பாதுகாப்புக்கு ஈரானின் தொடர் ஆதரவையும் ஊக்குவித்தார்” என்று தெரிவித்தார்.

மேலும், ஈரான் மற்றும் இஸ்ரேலிலிருந்து திரும்ப விரும்பும் இந்தியர்களுக்கு தேவைப்படும் உதவிகள் தொடர்ந்து செய்து கொடுக்கப்படும் என்றும் மேற்காசிய பிராந்திய நிலவரத்தை வெளியுறவு அமைச்சகம் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Iran Israel War Live Updates: Six Indians killed, one missing, one injured in conflict: MEA

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.