முகப்பு
உலகம்

கப்பல் வழித்தடங்களுக்கு அச்சுறுத்தல் கூடாது: ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு

போர் தொடங்கியபின் 2-ஆவது முறையாக ஈரான் அதிபருடன் பேச்சு!

Updated On : 21 மார்ச் 2026, 5:33 pm IST
ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி - கோப்புப்படம்
பகிர்:

ஈரான் அதிபர் மசூத் பெஸெஷ்கியானுடன் தொலைபேசி வழியாகப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி ரமலான் வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

இந்த உரையாடலில் ஈரான் அதிபரிடம் மோடி, ஈகைத் திருநாள் வாழ்த்துகளுடன், இந்தப் பண்டிகைக்காலம் மேற்காசியாவில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் செழிப்பைக் கொண்டு வரும் என்ற நம்பிக்கையிருப்பதாகவும் தெரிவித்தார்.

முக்கிய உள்கட்டமைப்புகளின் மீதான தாக்குதல்களுக்கு மோடி கண்டனம் தெரிவித்ததுடன், இந்தத் தாக்குதல்கள் பிராந்திய நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தலாகவும் உலகளாவிய விநியோகச் சங்கிலியைச் சீர்குலைப்பதாகவும் இருப்பதாக வருத்தம் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

கப்பல் போக்குவரத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் கப்பல் போக்குவரத்து வழித்தடங்கள் திறக்கப்பட்டிருப்பதுடன் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்வதையும் அவர் ஈரான் தலைமையிடம் வலியுறுத்தினார்.

ஈரானிலுள்ள இந்தியர்களின் பாதுகாப்புக்கு ஈரானின் தொடர் ஆதரவையும் அவர் பாராட்டினார். கடந்த பிப். 28-இல் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுத்தாக்குதல்கள் தொடங்கியபின் ஈரான் தலைமையுடன் பிரதமர் மோடி இரண்டாவது முறையாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

summary

PM Modi speaks to Iran President; stresses on freedom of navigation, ensuring shipping lanes open

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.