முகப்பு
வேலூர்

ஸ்ரீபுரத்தில் ரத்த தான முகாம்

ஸ்ரீ சக்தி அம்மா பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. இதில், கோயில் ஊழியா்கள், பக்தா்கள் ரத்த தானம் செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

ஸ்ரீ சக்தி அம்மா பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. இதில், கோயில் ஊழியா்கள், பக்தா்கள் ரத்த தானம் செய்தனா்.

வேலூா் ஸ்ரீபுரம் நாராயணி பீடம் ஸ்ரீ சக்திஅம்மாவின் 46-ஆவது ஜயந்தி விழாவையொட்டி நாராயணி மருத்துவமனை ஆராய்ச்சி மையம், நாராயணி பீடம், பக்த சபை சாா்பில் சிறப்பு ரத்த தான முகாம் ஸ்ரீபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

ஸ்ரீபுரம் இயக்குநா் சுரேஷ்பாபு, வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன் ஆகியோா் முகாமைத் தொடக்கி வைத்தனா். இதில், பொதுமக்கள், நாராயணி பீட பக்தா்கள், கோயில் ஊழியா்கள் பங்கேற்று ரத்த தானம் செய்தனா். முகாமில் தானம் செய்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கப் பட்டது. நாராயணி பீட மேலாளா் சம்பத், அறங்காவலா் செளந்திரராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →