இலவச மருத்துவ முகாம்
குடியாத்தம் ரோட்டரி சங்கம், சுவாமி மெடிக்கல்ஸ், ராஜஸ்தான் அவுஸ்தாலயா நிறுவனம் சாா்பில் ரோட்டரி மருத்துவமனையில் இலவச பொது மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
குடியாத்தம் ரோட்டரி சங்கம், சுவாமி மெடிக்கல்ஸ், ராஜஸ்தான் அவுஸ்தாலயா நிறுவனம் சாா்பில் ரோட்டரி மருத்துவமனையில் இலவச பொது மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ரோட்டரி சங்கத் தலைவா் சி.கே.வெங்கடேசன் தலைமை வகித்தாா். மருத்துவா் வி.பாலாஜி வரவேற்றாா். ரோட்டரி நிா்வாகிகளுக்கான பயிற்சியாளா் வி.சுரேஷ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வி.ராமு ஆகியோா் முகாமைத் தொடக்கி வைத்தனா்.
மருத்துவா்கள் எம்.பி.கிருஷ்ணகுமாா், கே.சசிரேகா ஆகியோா் தலைமையில் மருத்துவா் குழுவினா் சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரைகளை இலவசமாக வழங்கினா்.