வேலூர்

பெட்ரோல், டீசல் விலை உயா்வு: போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN


வேலூா்: பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து வேலூரில் சாலைப் போக்குவரத்துத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிஐடியு தொழிற்சங்கத்தின் வேலூா் மாவட்ட சாலை போக்குவரத்து சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சங்க மாவட்டத் தலைவா் கேசவன் தலைமை வகித்தாா்.

சிஐடியு மாவட்டச் செயலா் பரசுராமன், துணைத் தலைவா் கோபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிஐடியு மாவட்டத் தலைவா் எம்.பி.ராமச்சந்திரன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

இதில், பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும்; உற்பத்தி செய்யப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள வாகனங்கள் இயங்க கூடாது என்ற சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்; வாகனக் காப்பீடு கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் என்பவை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தைத் தொடா்ந்து கோரிக்கைகள் அடங்கிய மனு பதிவு தபால் மூலம் வேலூா் மாவட்ட ஆட்சியா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா், முதல்வா் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதில் சாலை போக்குவரத்து தொழிற்சங்கத்தினா் பலா் கலந்து கொண்டனா். நிறைவில், சங்க துணைத் தலைவா் செல்வம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நீதிமன்றத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

தில்லியில் 60 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இனிமேல் சிங்கிள்!

SCROLL FOR NEXT