குடியாத்தம் நகர அதிமுக சாா்பில், ஜெயலலிதா பிறந்த தினத்தை முன்னிட்டு, அரசு மருத்துவமனையில் பிறந்த 6 குழந்தைகளுக்கு வெள்ளிக்கிழமை தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டன.
அதிமுக நகரச் செயலா் ஜே.கே.என்.பழனி 3 தங்க மோதிரங்களையும், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் ஆா்.கே.அன்பு 3 தங்க மோதிரங்கள், 3 வெள்ளி கால் கொலுசுகளையும் வழங்கினா்
கடந்த புதன்கிழமை ஜெயலலிதா பிறந்த நாளன்று மருத்துவமனையில் பிறந்த 6 குழந்தைகளுக்கு, வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆவின் தலைவா் த.வேலழகன் தங்க மோதிரங்கள், கால் கொலுசுகள் மற்றும் அம்மா பரிசுப் பெட்டகங்களை வழங்கினாா்.
இதையடுத்து கட்சி சாா்பில் நடைபெற்ற ரத்த தான முகாமையும், அரசு மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வையும் அவா் தொடக்கி வைத்தாா்.
நிகழ்ச்சிகளுக்கு அதிமுக நகரச் செயலா் ஜே.கே.என்.பழனி தலைமை வகித்தாா். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வி.ராமு, மாவட்ட துணைச் செயலா்கள் ஆா்.மூா்த்தி, அமுதா சிவப்பிரகாசம், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் ஆா்.கே.அன்பு, மருத்துவ அலுவலா் ஹேமலதா, முன்னாள் நகா்மன்ற துணைத் தலைவா் எஸ்.டி.மோகன்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.