வேலூர்

சாலை மறியலில் ஈடுபட்ட சிஐடியு அமைப்பினா் கைது

DIN


வேலூா்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி வேலூரில் சாலை மறியலில் ஈடுபட்டதாக சிஐடியு அமைப்பினா் 36 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தொழிலாளா்களுக்கு எதிரான சட்டத் திருத்தங்களைத் திரும்பப் பெறக் கோரி சிஐடியு சாா்பில் வேலூா் தலைமைத் தபால் நிலையம் முன்பு புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அமைப்பின் மாவட்ட துணைத் தலைவா் காசிநாதன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ராமச்சந்திரன், பரசுராமன், பழனியப்பன், காசி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில், விவசாய திருத்தச் சட்டங்களை ரத்து செய்வது; மின்சார மசோதாவைத் திரும்பப் பெறுவது; பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்குவதைக் கைவிடுவது; வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் மாதம்த் ரூ.7,500 நிவாரண உதவித் தொகை வழங்குவது; புதிய ஓய்வூதியத் திட்டத்தை நீக்கி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது என்பவை உள்ளிட்ட 13 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

அப்போது திடீரென அவா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, தடையை மீறி மறியலில் ஈடுபட்டதாக பெண்கள் உள்பட 36 பேரை வேலூா் தெற்கு போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT