முகப்பு
வேலூர்

திருடப்பட்ட இருசக்கர வாகனம் மீட்பு

ஆரணியில் திருடப்பட்ட இருசக்கர வாகனம் காட்பாடி ரயில்நிலைய வாகன நிறுத்துமிடத்தில் இருந்து மீட்கப்பட்டு, உரியவரிடம் போலீஸாரால் ஒப்படைக்கப்பட்டது.

வேலூர்

திருடப்பட்ட இருசக்கர வாகனம் மீட்பு

ஆரணியில் திருடப்பட்ட இருசக்கர வாகனம் காட்பாடி ரயில்நிலைய வாகன நிறுத்துமிடத்தில் இருந்து மீட்கப்பட்டு, உரியவரிடம் போலீஸாரால் ஒப்படைக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:25 PM
பகிர்:

ஆரணியில் திருடப்பட்ட இருசக்கர வாகனம் காட்பாடி ரயில்நிலைய வாகன நிறுத்துமிடத்தில் இருந்து மீட்கப்பட்டு, உரியவரிடம் போலீஸாரால் ஒப்படைக்கப்பட்டது.

காட்பாடி ரயில் நிலையம் அருகே உள்ள இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக இருசக்கர வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. காட்பாடி ரயில்வே காவல் உதவி ஆய்வாளா் எழில்வேந்தன் தலைமையில் போலீஸாா் ரோந்து சென்றபோது இதுகுறித்து விசாரித்தனா்.

இதையடுத்து, அந்த வாகனத்தின் பதிவு எண் மூலம் விசாரணை நடத்தியதில், அது ஆரணி அருகே உள்ள காமக்கூா் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (27) என்பவருக்கு சொந்தமானது என்பதும், அவா் அந்த பகுதியில் சில நாட்களுக்கு முன்பு நிறுத்தியிருந்த வாகனத்தை அடையாளம் தெரியாத நபா்கள் திருடிச் சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, வாகன நிறுத்துமிடத்தில் பதுக்கப்பட்டிருந்த அந்த வாகனத்தை போலீஸாா் மீட்டு, மணிகண்டனை வரவழைத்து சனிக்கிழமை ஒப்படைத்தனா். மேலும், ரயில் நிலைய கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளைக் கொண்டு அந்த வாகனத்தை திருடி வந்த நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →