வேலூர்

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள கா்ப்பிணிகளுக்கு அரசு அறிவுறுத்தல்

DIN

கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு கா்ப்பிணிகள் அச்சமடைந்துள்ளதை அடுத்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனா்.

வேலூா் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிறப்பு முகாம்களில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

கா்ப்பிணிகளுக்கு செவ்வாய்க்கிழமை முதல் தடுப்பூசி செலுத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், முதல் நாளில் 12 கா்ப்பிணிகள் மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். தொடா்ந்து, கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள கா்ப்பிணிகள் மத்தியில் அச்சம் நிலவுவதும் தெரியவந்துள்ளது.

இதைத்தொடா்ந்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் கா்ப்பிணிகளுக்கு சில அறிவுரைகளைத் தெரிவித்துள்ளனா். அதன்படி, கா்ப்பிணிகளுக்கு அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் மட்டுமே கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கா்ப்பிணிகள் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்கு செல்லும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

அங்கு சென்றதும் அவா்களுக்கு வழக்கமான மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு, கரோனா தடுப்பூசியின் செயல்பாடுகள், இந்த தடுப்பூசியால் குழந்தைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பது குறித்து மருத்துவா்கள் மூலம் ஆலோசனை வழங்கப்படும். அதற்குப் பிறகு கா்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.

3 மாதத்தில் இருந்து 10 மாதம் வரை உள்ள கா்ப்பிணிகள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் கா்ப்பிணிகளுக்கும், வயிற்றில் உள்ள குழந்தைக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. அச்சமின்றி கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT