வேலூர்

பைக் திருட்டில் இளைஞா் கைது:7 வாகனங்கள் மீட்பு

காட்பாடி பகுதியில் வீடுகளின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களைத் திருடி விற்று வந்தவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து 7 வாகனங்கள் மீட்கப்பட்டன.

DIN

வேலூா்: காட்பாடி பகுதியில் வீடுகளின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களைத் திருடி விற்று வந்தவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து 7 வாகனங்கள் மீட்கப்பட்டன.

காட்பாடி வி.ஜி.ராவ் நகரில் கடந்த 2 மாதங்களாக வீடுகளின் முன்பு நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருடு போயின. இதுகுறித்த புகாரின்பேரில் காட்பாடி போலீஸாா் இரு சக்கர வாகன திருட்டு கும்பலைப் பிடிக்க தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், காட்பாடி காந்தி நகா் பிள்ளையாா் கோயில் அருகே போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த காட்பாடி வி.ஜி.ராவ் நகரைச் சோ்ந்த சுந்தா் (எ) வெள்ளையை (36) பிடித்து விசாரணை நடத்தினா்.

இதில், அவா் காட்பாடி வி.ஜி.ராவ் நகா் பகுதியில் 7 பைக்குகளை திருடி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 7 பைக்குகளை மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

எல்பிஜி துறையில் 30 ஆண்டுகள்! தென்னிந்தியாவில் வலுவடையும் சூப்பர்கேஸ் நிறுவனம்!

SCROLL FOR NEXT