முகப்பு
வேலூர்

கலவை அருகே குட்டையில் மூழ்கி 2 சிறுமிகள் பலி

ஆற்காடு அடுத்த கலவை அருகே குட்டையில் மூழ்கி 2 சிறுமிகள் புதன்கிழமை உயிரிழந்தனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:38 AM
கலவை அருகே குட்டையில் மூழ்கி 2 சிறுமிகள் பலி
பகிர்:

ஆற்காடு அடுத்த கலவை அருகே குட்டையில் மூழ்கி 2 சிறுமிகள் புதன்கிழமை உயிரிழந்தனர்.

கலவை வட்டம் செங்கனாவரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி. கூலி தொழிலாளி இவரது மகள் கல்பனா (11). அதே பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மகள் கீர்த்தி(8). அப்பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மற்றும் நான்காம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இந்நிலையில் புதன்கிழமை காலை 11 மணி அளவில் சிறுமிகள் இருவரும் வீட்டிலிருந்து வெளியில் சென்றுள்ளனர். நீண்ட நேரமாக வீட்டுக்கு வராததால் பெற்றோர்கள் பல இடங்களில் தேடி உள்ளனர். அப்போது அருகிலுள்ள குட்டையின் அருகே சிறுமிகளின் ஆடைகள் இருந்துள்ளது.

இதனை கண்ட அவர்கள் சிறுமிகள் குளிக்கும்போது தண்ணீரில் மூழ்கி இருக்கலாம் என கருதி குட்டையில் பொதுமக்களுடன் தேடியபோது இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டன.

இந்த சம்பவம் குறித்து கலவை காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சங்கராபுரம் பகுதியில் 2 சிறுமிகள் குட்டையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.