ஆந்திரம்: கோதாவரி ஆற்றில் மூழ்கி பொறியியல் மாணவர்கள் 5 பேர் பலி
ஆந்திரத்தில் கோதாவரி ஆற்றில் மூழ்கி பொறியியல் மாணவர்கள் 5 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரத்தில் கோதாவரி ஆற்றில் மூழ்கி பொறியியல் மாணவர்கள் 5 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், எலூரு மாவட்டத்தில் உள்ள கோதாவரி ஆற்றில் வெள்ளிக்கிழமை ஐந்து பொறியியல் மாணவர்கள் நீரில் மூழ்கி பலியாகினர். மேலும் இருவர் உயிர் தப்பினர் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுகுறித்து போலாவரம் துணை காவல் கண்காணிப்பாளர் எம். வெங்கடேஸ்வரா கூறுகையில், குளிப்பதற்காக ஆற்றில் இறங்கிய ஐந்து (பொறியியல்) மாணவர்கள் நீரில் மூழ்கி பலியாகினர்.
Advertisement
இருவர் உயிர் தப்பினர். நீச்சல் தெரிந்ததால் இரண்டு மாணவர்கள் தப்பித்துவிட்டனர். ஆனால் மற்றவர்களால் முடியவில்லை. ஆற்றின் ஆழம் குறித்து மாணவர்கள் அறியாமல், நீரில் இறங்கியதால் அவர்களுக்கு தப்பிக்க எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை.
மூன்று உடல்கள் மீட்கப்பட்டு, கூராய்வுக்கு அனுப்பப்பட்டு, அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டன.
மீதமுள்ள இரண்டு உடல்களைக் கண்டறியும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.
கோதாவரி ஆற்றில் மூழ்கி பொறியியல் மாணவர்கள் 5 பேர் பலியான நிகழ்வு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Five engineering students drowned in the Godavari river here in Eluru district on Friday, while two others survived, a police official said.