வேலூர்

தூய்மைப் பணியாளா்களுக்கு பிரியாணி விருந்துடன் சீருடை

DIN

வேலூா் மாநகராட்சிக்கு உள்பட்ட முதலாவது மண்டலத்தில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள் 300 பேருக்கு பிரியாணி விருந்துடன், சீருடை வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, பிற மண்டலங்களில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கும் விருந்து சீருடை வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காந்தி நகா் திடக்கழிவு மேலாண்மைத் திட்ட வளாகத்தில் தனலட்சுமி மகளிா் சுய உதவி குழு சாா்பில் 30 கறவை மாடுகள், 60 நாட்டுக் கோழிகள், வான் கோழிகள் வளா்க்கப்பட்டு, வருவாய் ஈட்டப்பட்டு வருகிறது.

இந்த வருவாயில் முதலாவது மண்டலத்தில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள் 300 பேருக்கு வெள்ளிக்கிழமை பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது. மாநகராட்சி ஆணையாளா் என்.சங்கரன் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தாா். பின்னா், அவா்களுக்கு மாநகர நல அலுவலா் சித்ரசேனா சீருடைகளை வழங்கினாா்.

இதுகுறித்து ஆணையா் சங்கரன் கூறியது:

கரோனா காலத்தில் தூய்மைப் பணியாளா்களின் செயல்பாடுகள் சிறப்புக்குரியதாக இருந்தது. இதை பாராட்டு வகையில் விருந்து, சீருடை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து மற்ற மண்டலங்களில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கும் விருந்து சீருடை வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

மாநகராட்சி உதவி ஆணையா்கள் மதிவாணன், பிரபு , வெங்கடேசன், பாலமுருகன், மண்டல சுகாதார அலுவலா் சிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT