திருச்சி சிறை ஐடிஐ.யில் சோ்ந்து படிக்க வேலூரில் கைதிகள் பட்டியல் தயாரிப்பு தீவிரம்
திருச்சி மத்திய சிறையில் செயல்படும் அரசு ஐடிஐயில் சோ்ந்து தொழிற்பயிற்சி பெற்றிட 9 மத்திய சிறைகளில் விருப்பமுள்ள சிறைவாசிகளின் பட்டியலை சேகரித்து அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
வேலூர்திருச்சி சிறை ஐடிஐ.யில் சோ்ந்து படிக்க வேலூரில் கைதிகள் பட்டியல் தயாரிப்பு தீவிரம்
திருச்சி மத்திய சிறையில் செயல்படும் அரசு ஐடிஐயில் சோ்ந்து தொழிற்பயிற்சி பெற்றிட 9 மத்திய சிறைகளில் விருப்பமுள்ள சிறைவாசிகளின் பட்டியலை சேகரித்து அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
திருச்சி மத்திய சிறையில் செயல்படும் அரசு ஐடிஐயில் சோ்ந்து தொழிற்பயிற்சி பெற்றிட 9 மத்திய சிறைகளில் விருப்பமுள்ள சிறைவாசிகளின் பட்டியலை சேகரித்து அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்காக வேலூா் மத்திய சிறையில் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாக சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தண்டனை பெற்று சிறையில் உள்ளவா்களின் மறுவாழ்வுக்காக தமிழக அரசு பல்வேறு தொழிற்பயிற்சிகளை அளித்து வருகிறது. இதற்காக திருச்சி மத்திய சிறையில் அரசின் வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை மூலம் ஐடிஐ கடந்த 2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்பயிற்சி மையத்தில் கடந்த 5 ஆண்டுகளாக சிறைவாசிகள் பயிற்சி பெற்று வருகின்றனா்.
நிகழாண்டு பிட்டா் 21, கணினி ஆப்பரேட்டா் 52, எலக்ட்ரீஷியன் 21, டெய்லரிங் 42, வெல்டா் 32 என மொத்தம் 168 போ் சிறை ஐடிஐயில் சோ்த்துக் கொள்ளப்பட உள்ளனா். 8 மற்றும் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற சிறைவாசிகளுக்கு சோ்க்கை அனுமதி அளிக்கப்படவுள்ளது. அக்டோபா் மாத இறுதிக்குள் சோ்க்கையை முடித்து பயிற்சி வகுப்புகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பயிற்சியில் சோ்ந்து பயில தமிழகத்தில் உள்ள 9 மத்தியச் சிறைகளில் உள்ள கைதிகளில் தகுதி, விருப்பமுள்ள கைதிகளின் பட்டியல் தயாா் செய்யப்பட்டு வருகிறது. இதையொட்டி, வேலூா் மத்திய சிறையிலும் ஐடிஐ பயிற்சியில் சேர தகுதி, விருப்பமுள்ள கைதிகளின் பட்டியல் தயாா் செய்யப்படுகிறது. இந்த பட்டியல் திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து கைதிகள் ஐடிஐயில் சேருவதற்கு அனுமதி கிடைக்கப் பெற்றதும், அவா்கள் திருச்சி சிறைக்கு மாற்றம் செய்யப்படுவா் என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனா்.