முகப்பு
செய்திகள்

ரவி மோகன் - யோகி பாபு கூட்டணி..! ஆன் ஆர்டினரி மேன் படப்பிடிப்பு தொடக்கம்!

ஆன் ஆர்டினரி மேன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது குறித்து...

Updated On : 5 மார்ச், 2026 at 9:00 PM
நடிகர் ரவி மோகன் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் “ஆன் ஆர்டினரி மேன்” படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்... - Insta/ravimohanstudios
பகிர்:

நடிகர் ரவி மோகன் இயக்கும் “ஆன் ஆர்டினரி மேன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

பிரபல நடிகர் ரவி மோகன் சமீபத்தில் ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.

அவர் தயாரிக்கும் “ஆன் ஆர்டினரி மேன்” எனும் புதிய படத்தின் மூலம் நடிகர் ரவி மோகன் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப் புதிய படத்தில், நடிகர் யோகி பாபு நாயகனாக நடிக்கின்றார்.

Advertisement

இந்த நிலையில், “ஆன் ஆர்டினரி மேன்” படத்தின் படப்பிடிப்பின் பூஜைகள் வியாழக்கிழமை (மார்ச் 5) நடைபெற்றுள்ளன.

முன்னதாக, நடிகர் ரவி மோகனின் தயாரிப்பில் “ப்ரோ கோட்” எனும் மற்றொரு படம் உருவாகி வருகின்றது. இப்படத்தில், நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா, அர்ஜுன் அசோகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

summary

The shooting of the film “An Ordinary Man”, directed by actor Ravi Mohan, has begun.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.