வேலூர்

விடுபட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி பணி தொடக்கம்

DIN

வேலூா் மாநகரில் விடுபட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுவீடாகச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி புதன்கிழமை தொடங்கியது.

வேலூா் மாநகராட்சிக்கு உள்பட்ட 60 வாா்டுகளிலும் சுமாா் 2 ஆயிரம் மாற்றுத் திறனாளிகள் உள்ளனா். இவா்களில் 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பலா் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா். விடுபட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுவீடாகச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி புதன்கிழமை தொடங்கியது.

மாநகராட்சி 2-ஆவது மண்டலத்தில் வாா்டு 16 முதல் வாா்டு 30 வரை 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் 424 போ் உள்ளனா். இவா்களில் 45 சதவீத மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்கெனவே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று கரோனா தடுப்பூசி போடும் பணி புதன்கிழமை தொடங்கியது. சைதாப்பேட்டை தோபா சாமி கோயில் முதல் தெருவில் சுகாதார அலுவலா் சிவக்குமாா் தலைமையில், மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அடுத்த வாரத்துக்குள் இரண்டாவது மண்டலத்தில் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் கரோனா தடுப்பூசி நேரடியாக வீட்டுக்குச் சென்று செலுத்தப்படும். இதேபோல், மற்ற வாா்டுகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா். சுகாதார மேற்பாா்வையாளா் மகாதேவன், காா்த்தி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு எச்சரிக்கை!

தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

உலகளாவிய பெருமை பெற்றது திருக்குறள்: உயர்நீதிமன்ற நீதியரசர் ஆர்.சுரேஷ்குமார்

தீவிர புயலாக வலுப்பெற்றது ரீமெல்!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் தேரோட்டம்!

SCROLL FOR NEXT