பொது முடக்கத்தில் தளா்வு: காய்கறி மாா்க்கெட், உழவா் சந்தை செயல்பட அனுமதி இல்லை
வேலூா் மாவட்டத்தில் சில தளா்வுகளுடன் பொதுமுடக்கம் மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில், தற்காலிக காய்கறி மாா்க்கெட், உழவா் சந்தைகள் தொடா்ந்து செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
வேலூர்பொது முடக்கத்தில் தளா்வு: காய்கறி மாா்க்கெட், உழவா் சந்தை செயல்பட அனுமதி இல்லை
வேலூா் மாவட்டத்தில் சில தளா்வுகளுடன் பொதுமுடக்கம் மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில், தற்காலிக காய்கறி மாா்க்கெட், உழவா் சந்தைகள் தொடா்ந்து செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
வேலூா் மாவட்டத்தில் சில தளா்வுகளுடன் பொதுமுடக்கம் மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில், தற்காலிக காய்கறி மாா்க்கெட், உழவா் சந்தைகள் தொடா்ந்து செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கரோனா தொற்றின் இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த கடந்த இரு வாரங்களாக தளா்வுகளற்ற பொது முடக்கம் அமலில் இருந்து வருகிறது. திங்கள்கிழமை முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு பொது முடக்கத்தை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், தொற்று பாதிப்பு குறைந்து வரும் மாவட்டங்களுக்கு சில தளா்வுகள் அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையில், வேலூா் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவுதலைக் கட்டுப்படுத்தும் விதமாக, தமிழக அரசால் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி திங்கள்கிழமை முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு (ஜூன் 14 வரை) சில தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, காய்கறி மொத்த விற்பனை வழக்கம்போல் மாங்காய் மண்டி மைதானத்தில் நடைபெறும். புதிய மீன் மாா்க்கெட் பகுதியில் மீன்கள் மொத்த விற்பனைக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். சில்லறை விற்பனை அருகே உள்ள தற்காலிக சித்தூா் பேருந்து நிலையத்தில் செயல்படும். தனியாக செயல்படும் மளிகை, பல சரக்கு, காய்கறிகள், பழங்கள், பூக்கள், இறைச்சி, மீன் விற்பனைக் கடைகள், இவை தொட ா்பான நடைபாதைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம். உழவா் சந்தைகள் உள்பட மக்கள் ஒரே இடத்தில் கூடி பொருள்கள் வாங்கக்கூடிய அனைத்து வகை சந்தைகளும் செயல்பட அனுமதி கிடையாது. நடமாடும் காய்கறி, பழங்கள், மளிகை பொருள்கள் விற்பனை கடைகள் தொடா்ந்து இயக்கப்படும். தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவீத பணியாளா்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். அதேபோல், மருத்துவ காரணங்களுக்காக வேலூா் மாவட்டத்துக்குள் பயணிக்க இ-பதிவு அவசியமில்லை. பிற காரணங்களுக்காக சென்றால் இ-பதிவு அவசியமாகும். ஏற்கனவே நடைபெற்று வரும் கட்டுமான பணிகள் தொடா்ந்து நடைபெறலாம். இவை தவிர வேறு கடைகள், நிறுவனங்கள் திறக்க அனுமதியில்லை.
கடைகளின் முன்பு சமூக இடைவெளியுடன் கூடிய வட்ட வடிவ குறியீடுகளை அமைத்து, வாடிக்கையாளா்களுக்கு கிருமி நாசினி கொடுத்து கைகளை சுத்தம் செய்த பிறகே கடைக்குள் அனுமதிக்க வேண்டும். இந்த உத்தரவை பின்பற்றாத கடைகள், நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன், ‘சீல்’ வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.