FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சனிப்பெயர்ச்சி பலன்கள்

சனிப்பெயர்ச்சி பலன்கள் - 2026: சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கான சனிப்பெயர்ச்சி பலன்களை விரிவாக தெரிந்துகொள்வோம்.

சிம்ம ராசி
பகிர்:

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 2026 ஆண்டுக்கான சனிப்பெயர்ச்சி பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார்.

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

கிரகநிலை

Advertisement

Advertisement

இதுவரை உங்களது களத்திர ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி அஷ்டம ஸ்தானத்திற்கு செல்கிறார்.

மூன்றாம் பார்வையால் தொழில் ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையால் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

பலன்

சிம்ம ராசி அன்பர்களே, இந்த சனிப் பெயர்ச்சியால் முக்கிய முடிவுகளை ஒத்திப்போடுவது நல்ல நிலையை உங்களுக்கு அளிக்கும். எதிர்கால சிந்தனைகள் மேலோங்கும். உறவினர்களின் வருகையால் கலகலப்பு ஏற்படும். புகழும், தைரியமும் ஏற்பட்டு பல்கி பெருகி சமூகத்தில் உயர்வான அந்தஸ்தை பெறுவீர்கள். சுற்றுலா வாய்ப்புகள் உருவாகும். அதன் மூலம் வாழ்க்கையில் சில படிப்பினைகளை உருவாக்கித் தரும்.  

குடும்பத்தில் புத்திரர்கள் இணக்கமான சூழ்நிலையும் குல தெய்வ அருளும் பரிபூரணமாக கிடைக்கும். கடந்த காலத்தில் எதிரித்தனம் பாராட்டியவர்கள் வீட்டில் நடக்கும் சுபகாரியம் ஒன்றில் கலந்து கொள்ள உங்கள் வீட்டுக்கு விசேஷ அழைப்பிதழ் வரும். கவனமுடன் செயல்பட்டு தவிர்த்து விடுவது நன்மை பயக்கும். தந்தை வழி  தொழில்களை பின்பற்றி பணிபுரிவோர்கள் தகுந்த முன்னேற்றம் பெறுவார்கள்.  

உத்தியோகஸ்தர்கள்

உங்களுக்குக் கிடைக்க வேண்டிய அனைத்து ஆதாயங்களும், பணவரவுகளும் தட்டிப் பறிக்க திருடர்களும், ஏமாற்றுப் பேர்வழிகளும் முயற்சி செய்வார்கள். திடீர் பயணம் ஏற்பட்டு அலைச்சலை உண்டாக்கும். நேர்மையாக நடந்து கொண்டால் மட்டுமே பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் போது எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.

தொழிலதிபர்கள்

தொழிலில் ஸ்திரமான நிலையும், அபிவிருத்தி பணிகளும் நடந்து மனநிறைவை உண்டாக்கும். வங்கியில் கேட்ட கடனுதவி கிடைத்து வியாபாரத்தை விரிவுபடுத்த எண்ணம் மேலோங்கும். புதிய தொழிலுக்கு மூலதனம் வேண்டி பிரயாசை ஏற்படும்.

பெண்கள்

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்கள் சக ஊழியர்களின் வற்புறுத்தலின் பேரில் ஆபரணம் மற்றும் ஆடம்பர பொருட்களை தங்களுக்கென வாங்குவார்கள். அலுவலகப் பணியில் தொடர்புடைய வேலைகளை வீட்டிலும் வைத்து சரி பார்ப்பவர்களுக்கு குடும்ப உறுப்பினர்கள் தகுந்த உதவிகளைச் செய்வார்கள்.

கலைஞர்கள்

சக நடிகர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பெரியோரின் ஆசி கிட்டும். மூத்த கலைஞர்களின் பாராட்டும், அன்பும் உங்களைத் திக்கு முக்காட வைக்கும். பிறமொழிப் படங்களில் ஒப்பந்தங்கள்  கிடைக்கப் பெறலாம்.

அரசியல்வாதிகள்

மூத்த அரசியல்வாதிகள் ஆலோசனையின்படி நடந்து கொண்டால் பிரச்னைகளை சுலபமாக சமாளிக்கலாம். நல்ல எண்ணங்களுக்கு எப்பொழுதுமே வலிமை அதிகம். ஆகையால் நீங்கள் நல்லதையே எண்ணி நல்லது செய்யுங்கள்.

மாணவர்கள்

தங்கள் படிப்பில் முழு கவனம் செலுத்தி அதிக மதிப்பெண் பெறுவார்கள். பொழுது போக்கிற்காக எந்த ஒரு ஆபத்தான விஷயங்களிலும் தனியாக ஈடுபட வேண்டாம். வாகனங்களை உபயோகப்படுத்தும் போது மிக கவனம் தேவை.

மகம்

இந்த சனிப் பெயர்ச்சியால் கணவர், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். குடும்பத்தில் அமைதி எற்படும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

பூரம்

இந்த சனிப் பெயர்ச்சியால் எதிர்பார்த்த பணம் வந்து சேரும். குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். எனவே வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் மிகவும் கவனமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும்.

உத்திரம் 1ம் பாதம்

இந்த சனிப் பெயர்ச்சியால் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகைகள் மாறும். மனத்துணிச்சல் உண்டாகும்.  அதனால் எதை பற்றியும்  முன்பின் யோசிக்காமல் செயல்களில் இறங்கி விடுவீர்கள்.

பரிகாரம்

ஞாயிறுக்கிழமைதோறும் அருகிலிருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று 9 முறை வலம் வரவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments