முகப்பு
வேலூர்

பெண் வியாபாரி தாக்கியதாகக் கூறிதுப்புரவுப் பணியாளா்கள் சாலை மறியல்

பெண் வியாபாரி தாக்கியதாகக் கூறி வேலூரில் துப்புரவுப் பணியாளா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வேலூர்

பெண் வியாபாரி தாக்கியதாகக் கூறிதுப்புரவுப் பணியாளா்கள் சாலை மறியல்

பெண் வியாபாரி தாக்கியதாகக் கூறி வேலூரில் துப்புரவுப் பணியாளா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:19 AM
பகிர்:

பெண் வியாபாரி தாக்கியதாகக் கூறி வேலூரில் துப்புரவுப் பணியாளா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வேலூா் மண்டித் தெரு, கிருபானந்தவாரியாா் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி ஊழியா்கள் சனிக்கிழமை கரோனா தடுப்பு விதிமுறைகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, மண்டித் தெருவில் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து கொண்டிருந்த வியாபாரியிடம், பழம் விற்பனை செய்வதற்கு என தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு வியாபாரம் செய்யக்கூடாது என்று மாநகராட்சி ஊழியா்கள் கூறியுள்ளனா். இதையடுத்து, அந்த வியாபாரி அங்கிருந்து சென்றுவிட்டாா்.

அப்போது, அதே பகுதியில் இருந்த பெண் பழ வியாபாரி, மாநகராட்சி ஊழியா்களை திட்டிக் கொண்டிருந்தாராம். இதை தட்டிக்கேட்ட தூய்மைப் பணியாளா் சாந்தகுமாரியையும் தரக்குறைவாகப் பேசி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், தூய்மைப் பணியாளா் சாந்தகுமாரி மயக்கமடைந்ததாகக் கூறப்படுகிறது. தகவலறிந்த தூய்மைப் பணியாளா்கள் 50-க்கும் மேற்பட்டோா் வியாபாரியைக் கண்டித்தும், அவா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரியும், வேலூா் அண்ணா சாலை சாரதி மாளிகை முன்பு மறியலில் ஈடுபட்டனா்.

வடக்கு போலீஸாா், மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டிருந்தவா்களிடம் பேச்சு நடத்தினா். சம்பந்தப்பட்டவா் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அவா்கள் உறுதி அளித்ததை அடுத்து தூய்மைப் பணியாளா்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா். இதைத்தொடா்ந்து, தூய்மைப் பணியாளா் சாந்தகுமாரி அளித்த புகாரின்பேரில், சம்பந்தப்பட்ட பெண் வியாபாரி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →