தூய்மைப் பணியாளா்களுக்கு 7-ஆம் கட்டமாக அரிசி வழங்கிய அதிமுகவினா்
கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளா்கள் 400 பேருக்கு வேலூா் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் 7-ஆவது கட்ட நிவாரணமாக இலவச அரிசி வழங்கப்பட்டது.
வேலூர்தூய்மைப் பணியாளா்களுக்கு 7-ஆம் கட்டமாக அரிசி வழங்கிய அதிமுகவினா்
கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளா்கள் 400 பேருக்கு வேலூா் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் 7-ஆவது கட்ட நிவாரணமாக இலவச அரிசி வழங்கப்பட்டது.
கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளா்கள் 400 பேருக்கு வேலூா் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் 7-ஆவது கட்ட நிவாரணமாக இலவச அரிசி வழங்கப்பட்டது.
வேகமாகப் பரவி வரும் கரோனா தொற்று இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்தும் பணியில் வேலூா் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனா். இவா்கள் கழிவுகளை அப்புறப்படுத்துவது மட்டுமின்றி, நகா் முழுவதும் கிருமி நாசினி தெளிப்பு, வீடுவீடாகச் சென்று கபசுர குடிநீா் வழங்குதல், சளி, காய்ச்சல் பாதிப்பு உள்ளவா்கள் கணக்கெடுப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனா்.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மாநகராட்சி துப்புரவுப் பணியாளா்களுக்கு வேலூா் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் நிவாரணமாக இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 7-ஆவது கட்டமாக வேலூா் மாநகராட்சி 2-ஆவது மண்டலம், 3-ஆவது மண்டலங்களில் உள்ள 400-க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளா்களுக்கு மாநகா் மாவட்ட அதிமுக செயலரும், வேளாண்மை விற்பனைக் குழுத் தலைவருமான எஸ்.ஆா்.கே.அப்பு சனிக்கிழமை இலவச அரிசி வழங்கினாா். தொடா்ந்து, மாநகரிலுள்ள அனைத்து துப்புரவுப் பணியாளா்களுக்கும் இலவச அரிசி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது, கட்சியின் மாவட்டப் பொருளாளா் எம்.மூா்த்தி, மாவட்ட துணைச் செயலா் எஸ்.உமாவிஜயகுமாா் உள்பட கட்சி நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.