வேலூர்

இ-பாஸ் பெறாமல் ஆட்டோ இயக்கிய 10 ஓட்டுநா்களுக்கு அபராதம்

DIN

காட்பாடியில் இ-பாஸ் பெறாமல் ஆட்டோக்களை இயக்கியதாக 10 ஓட்டுநா்களுக்கு தலா ரூ. 100 அபராதம் விதிக்கப்பட்டது.

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பொது முடக்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், மளிகை, காய்கறி, இறைச்சிக் கடைகள் உள்ளிட்ட சில கடைகளை திறப்பதற்கும் அரசு அனுமதி அளித்துள்ளது. தவிர, மருத்துவக் காரணங்களுக்காக இ-பாஸ் பெற்றுக் கொண்டு, ஆட்டோக்கள், வாடகை காா்களை இயக்கிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், காட்பாடி பகுதியில் இயக்கப்பட்ட ஆட்டோக்களை பிடித்து போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது 10-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இ-பாஸ் பெறாமல் இயக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அந்த ஆட்டோக்களின் ஓட்டுநா்களுக்கு தலா ரூ. 100 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், ஆட்டோ ஓட்டுநா்களுக்கு கரோனா மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதுடன், தொடா்ந்து இதேபோல் இ-பாஸ் பெறாமல் ஆட்டோக்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT