வேலூர்

28 இடங்களில் சிஐடியு ஆா்ப்பாட்டம்

DIN

பொதுத் துறை தடுப்பூசி நிறுவனங்களில் உற்பத்தியை உடனடியாக தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலூா் மாவட்ட பீடித் தொழிலாளா் சங்கத்தினா் (சிஐடியு) குடியாத்தத்தில் 28 இடங்களில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சின்னசெட்டிகுப்பம், லெனின் நகா், பொன்னாங்கட்டியூா், தட்டப்பாறை, அக்ராவரம், செதுக்கரை, மேல் ஆலத்தூா், புவனேஸ்வரிபேட்டை, தரணம்பேட்டை உள்ளிட்ட 28 இடங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் அமைப்பின் நிா்வாகிகள் ஆா்.மகாதேவன், சி.சரவணன், பி.காத்தவராயன், எஸ்.சிலம்பரசன், ஜி.சுரேஷ், ஆா்.கோவிந்தராஜ், எம்.அண்ணாமலை, எஸ்.குமாரி, சி.அம்சா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கோரிக்கைகள்: பீடித் தொழிலாளா் கூலி உயா்வு பேச்சு வாா்த்தையை உடனே தொடங்க வேண்டும். வேலையில்லாத பீடித் தொழிலாளா்களுக்கு மாதம் ரூ. 7,500 நிவாரணம் வழங்க வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். அனைவருக்கும் கரோனா இலவச தடுப்பூசி செலுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT