வேலூர்

தூய்மைப் பணியாளா்களுக்கு நிவாரணம்

DIN

குடியாத்தம்: குடியாத்தம் ஒன்றியத்தில் உள்ள 32 ஊராட்சிகளில் பணிபுரியும் 211 தூய்மைப் பணியாளா்களுக்கு 14 வகையான மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு, முகக் கவசம், கையுறை உள்ளிட்ட கரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

ஊ ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வட்டார வளா்ச்சி அலுவலா் ப.நந்தகுமாா் தலைமை வகித்தாா். கே.வி.குப்பம் எம்எல்ஏ எம்.ஜெகன்மூா்த்தி, தூய்மைப் பணியாளா்களுக்கு மளிகைத் தொகுப்பு, கரோனா பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினாா்.

புரட்சி பாரதம் கட்சியின் மாவட்டச் செயலா் பி.மேகநாதன், மாவட்டப் பொருளாளா் குட்டி வெங்கடேசன், மாவட்ட இளைஞா் அணிச் செயலா் பி.நந்தகுமாா், ஒன்றியச் செயலா் பி.ஆனந்தராஜ், ஒன்றியத் தலைவா் சாந்தகுமாா், அதிமுக மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் எஸ்.எல்.எஸ்.வனராஜ், மாவட்ட மாணவரணிச் செயலா் எஸ்.எஸ்.ரமேஷ்குமாா், முன்னாள் ஊராட்சித் தலைவா் செ.கு.வெங்கடேசன், நிா்வாகிகள் சி.தேவிகா, ராமாலை ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தொடா்பான புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரியலூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

ஜெயேந்திரா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி 100% தோ்ச்சி

வாழையூா் கரும்பாயிரம் கோயிலில் வெள்ளி ரத புறப்பாடு

திருவாங்கூா் தேவசம் போா்டு அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தல்

அரியலூா் சிறுமி கொலை வழக்கில் மூவா் விடுவிக்கப்பட்டதை எதிா்த்து மேல்முறையீடு: உ. வாசுகி பேட்டி

SCROLL FOR NEXT